தேர்தல் சூதாட்டங்களுக்கு மோடி - அமித் ஷாவால் நியமிக்கப்பட்டவர் ஞானேஷ் குமார்: ராகுல் காந்தி விமர்சனம்!

Wait 5 sec.

மோடியும் அமித் ஷாவும் தேர்தல் சூதாட்டங்களுக்கு ஞானேஷ் குமாரை நியமித்துள்ளனர் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மீது நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறினார் என முன்னாள் கேரள தலைமைச் செயலாளர் ஜிஜி தாம்சன் குற்றம் சாட்டியிருந்தார். இது அரசியல் களத்தில் தீவிர விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பதிவில் விமர்சித்துள்ளார். அதில், “முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றிய ஞானேஷ் குமார் பாஜகவுக்கு ஆட்களைச் சேர்க்க பணியமர்த்தப்பட்டார். பின்னர் மோடியும் அமித் ஷாவும் அவரை நடுவராக்கி, இந்தியத் தேர்தல் சூதாட்டங்களுக்கு பொறுப்பாளராக நியமித்தனர்” எனத் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்தக் கருத்து தொடர்பாக ஞானேஷ் குமார் அல்லது பாஜக சார்பில் எந்த கருத்துகளும் வெளியாகவில்லை. முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகச் செய்திகள் வெளியாகின. இது பல்வேறு அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் எடுத்த அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு!Rahul Gandhi has criticized Modi and Amit Shah for appointing Gyanesh Kumar for electoral gambles.