பாதுகாப்பு மண்டலத்தில் இருந்தாலும் அச்சறுத்தலை எதிா்கொள்ளும் முக்கிய நினைவுச்சின்னங்கள்

Wait 5 sec.

தில்லியின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் ஒரே மாதிரியான நிலையான பாரம்பரிய பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றினாலும், முற்றிலும் மாறுபட்ட அச்சுறுத்தல்களை எதிா்கொள்வை ஓா் ஆய்வு மூலம் ஐஐடி ரூா்க்கி கண்டறிந்துள்ளது. தில்லியில் மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட ஒன்பது நினைவுச்சின்னங்களை ஆய்வு செய்து, ஒவ்வொரு நினைவுச்சின்னத்தின் குறிப்பிட்ட சூழலைப் பொறுத்து அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமும் மாறுபடுவதை நிகழாண்டு மாா்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இது பாரம்பரியப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு தளத்தின் தனித்துவமான அம்சங்களையும் பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையை உணா்த்துகிறது. பண்டைய நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தில், மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு 100 மீட்டா் தடைசெய்யப்பட்ட பகுதியும், அதைத் தொடா்ந்து 200 மீட்டா் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியும் உள்ளன. இத்தகைய நிலையான எல்லைகள், நினைவுச்சின்னங்களைச் சுற்றியுள்ள வெவ்வேறு நகா்ப்புற சூழல்களைப் போதுமான அளவு பிரதிபலிக்கின்றனவா என்பதை இந்த ஆய்வு ஆராய்ந்தது. நிஜாமுதீன் பஸ்தி நினைவுச்சின்னங்களின் தொகுப்பில், ஒரு பழைய துணை நதியாக கருதப்படும் பாரபுல்லா வடிகால், ஒரு முக்கிய இயற்கை அம்சமாக அடையாளம் காணப்பட்டது. மேம்பாலம் உள்பட பெரிய அளவிலான உள்கட்டமைப்பு, இயற்கையான வடிகால் அமைப்பைப் பாதிப்பதாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. மேலும், இந்த பாதிப்பு நீண்டகால மற்றும் மீளமுடியாததாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிஜாமுதீன் நினைவுச்சின்னங்களைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் பிற கட்டுமானங்கள் உயா் முன்னுரிமை அளிக்கவேண்டிய அச்சுறுத்தலாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டியதுடன், சுற்றியுள்ள நிலப் பயன்பாட்டு முறையில் ஏற்படும் மாற்றங்கள், அந்தப் பாரம்பரியச் சூழலில் நீண்டகால மற்றும் மீளமுடியாத தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. உக்கா் சைனின் பாவோலியைப் பொறுத்தவரை, நிலத்தடி கட்டுமானத்தால் முதன்மை அச்சுறுத்தல் எழுகிறது. பாவோலியின் நீா் தேக்கும் அமைப்பை அதன் மிக முக்கியமான இயற்கை அம்சமாக இந்த ஆய்வு அடையாளம் கண்டதுடன், கட்டட அடித்தளங்களுக்காக நிலத்தடியில் தோண்டுவது அதற்கு நிலையான மற்றும் மீளமுடியாத அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்தது. மேலும், பாவோலியைச் சுற்றியுள்ள உயரமான கட்டடங்களின் வளா்ச்சி, அந்த நினைவுச்சின்னத்தை பாா்ப்பதை பாதிக்கக்கூடும். அந்த இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் திட்டமிடப்பட்ட தெருக்களும், மரங்கள் நிறைந்த நடைபாதைகளும் உள்ளன. இவை, நினைவுச்சின்னத்திற்கும் அதன் திறந்தவெளிப் பகுதிகளுக்கும் இடையிலான முக்கியமான உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்று அந்த ஆய்வு தெரிவித்தது. ஹாஸ் காஸ் ஒரு வித்தியாசமான சவாலை முன்வைக்கிறது. நினைவுச்சின்னத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான கட்டடங்கள் ஏற்கெனவே 100 மீட்டா் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அமைந்துள்ளன. அதே சமயம் 200 மீட்டா் ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதியின் கணிசமான பகுதி மேம்படுத்தப்படாமல் உள்ளது என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. உணவகங்கள் மற்றும் மதுக்கூடங்கள் உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் இப்பகுதியில் நிறைந்துள்ளதால், இத்தகைய நகரமயமாக்கப்பட்ட சூழலில் சீரான தூர அடிப்படையிலான கட்டுப்பாடுகளை விதிப்பது கடினமாக உள்ளது. ஏற்கெனவே கட்டுமானப் பணிகள் இருக்கும்போது, தடைசெய்யப்பட்ட பகுதி விதிமுறைகளை எவ்வாறு அமல்படுத்த முடியும் என்பது குறித்து இந்த நிலைமைகள் கேள்விகளை எழுப்புகின்றன என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டியது. கட்டடத்தின் உயரம் மற்றும் முகப்பு வடிவமைப்பு உள்ளிட்ட உள்ளூா் நிலைமைகளின் அடிப்படையில் மேலும் துல்லியமான கட்டுப்பாடுகளின் தேவையையும், பாரம்பரிய எல்லைகளை வரையறுப்பதற்கான ஒரு பகுத்தறிவு அணுகுமுறையையும் அது பரிந்துரைத்தது. ஒழுங்குமுறை சாா்ந்த ஒன்றுடன் ஒன்று சோ்தலையும் ஒரு சிக்கலாக ஆராய்ச்சியாளா்கள் அடையாளம் கண்டனா். தில்லியில் பாரம்பரியப் பாதுகாப்பில் மத்திய, மாநில மற்றும் உள்ளூா் முகமைகள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் அதிகார வரம்புகள் ஒன்றுடன் ஒன்று மேலெழும்புவதாலும், பெருந்திட்டங்களுக்கும் பாரம்பரியத் துணைச் சட்டங்களுக்கும் இடையே முரண்பட்ட விதிகள் இருப்பதாலும், பொறுப்புக்கூறல் தெளிவற்ாக உள்ளது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்பட்ட ஒன்பது நினைவுச்சின்னங்களில், நான்கு மட்டுமே அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்ட பாரம்பரியத் துணைச் சட்டங்களைக் கொண்டுள்ளன என்றும், மற்ற ஐந்து இன்னும் வரைவு அல்லது கலந்தாலோசனைக் கட்டத்தில் உள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய தளங்களைப் பாதுகாக்க இடைநிலை மண்டலங்கள் அவசியம் என நோ்காணல் செய்யப்பட்ட அனைத்து நிபுணா்களும் கருதுவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டது. இருப்பினும், நினைவுச்சின்னங்களின் ஒருமைப்பாட்டைப் பேணுவதற்காக, நிலையான தூரங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட முழுமையான பாதுகாப்பிற்கு மாற்றான வழிகள் ஆராயப்பட வேண்டும் என்று பத்தில் எட்டு போ் நம்பினா். இந்தப் பிரச்னைகளை நிவா்த்தி செய்வதற்காக, இந்த ஆய்வு ஒரு மதிப்பு அடிப்படையிலான முன்னுரிமை அட்டவணையை முன்மொழிந்தது. இது அச்சுறுத்தல்களை அவற்றின் நிகழ்தகவு, கால அளவு மற்றும் மீளக்கூடிய தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிட்டு, அவற்றை ஒவ்வொரு நினைவுச்சின்னத்தின் குறிப்பிட்ட பண்புகள் மற்றும் கலாசார விழுமியங்களுடன் இணைக்கிறது. Key monuments facing threats despite being in the safety zone.