தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை என மின்வெட்டு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதியில் இரவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். மின்வெட்டு பிரச்னை அதிகரித்ததையடுத்து, சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இதுதொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். எனினும், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை தொடர்கிறது. சமீபத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிலும் மின்வெட்டு ஏற்படுவது குறித்து பலரும் பேசி வருகின்றனர். தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் 3 மாதங்களில் முழுமையாக சரிசெய்யப்படும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் இன்று காலை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.எனினும் இன்று மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கலந்துகொண்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக் கொண்டிருக்கையில் மின்வெட்டு ஏற்பட்டது. சில வினாடிகளுக்கு பின்னர் மீண்டும் மின்சாரம் வந்தது. ஜெனெரேட்டர் மாற்றப்பட்டதால் சில வினாடிகள் மின்சாரம் தடைப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் தொடர் மின்வெட்டு குறித்து, குறிப்பாக அமைச்சர்களின் நிகழ்வுகளில் மின்வெட்டு ஏற்பட்டது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை. இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் ரிவியூ செய்யவில்லை. ரீலிஸ்-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல" என்று பதிவிட்டுள்ளார். DMK Leader MK stalin x post on power cut crisis in tamilnaduநிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!