100% வெற்றியுடன் முன்னேறிய இந்திய ஆடவர் ஹாக்கி அணி..!அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதல்!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, நான்கு குரூப் போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஹாக்கி ஆடவர் அணி குரூப் ஏவில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று நடைபெற்ற கடைசி லீக் சுற்றில் இந்திய அணி ஜப்பானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்தியாவின் அபிஷேக் 15ஆவது நிமிஷத்திலும் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 40ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்து அசத்தினார்கள். முதல் போட்டியில் இந்தோனேஷியாவை 13-1 எனவும் இரண்டாவது போட்டியில் இலங்கையை 16-1 எனவும் மூன்றாவது போட்டியில் தென் கொரியாவை 8-2 எனவும் வீழ்த்தியது. நடப்பு சாம்பியனான இந்திய அணி நான்கு போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தானுடன் அரையிறுதியில் மோதவிருக்கிறது. ! The Indian Men’s Team continues its winning run at the Asian Games 2026, beating Japan 2-0 to make it four wins from four and book a place in the Semi-Finals! The hunt for another Asian Games gold heads… pic.twitter.com/7tPrb7WIhv— Hockey India (@TheHockeyIndia) September 26, 2026ஸ்குவாஷ் ஆடவர் பிரிவில் இறுதிக்கு முன்னேறிய தமிழக வீரர்..! வரலாற்றுச் சாதனை படைப்பாரா?Asian Games 2026: Indian Mens hockey team into the semifinals with clash Pakistan