நாகாலாந்தில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் பலி!

Wait 5 sec.

நாகாலாந்து மாநிலத்தில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகாலாந்தில் 1990-ஆம் ஆண்டு முதல் மதுவிலக்குச் சட்டம் அமலில் உள்ள நிலையில், கடந்த இரண்டு நாள்களில் கள்ளச் சாராயம் குடித்து மொகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும், துயென்சாங் மாவட்டத்தில் 11 பேரும் என மொத்தம் 19 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டனர். உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய, மது மாதிரிகள் குவாஹாத்தியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அடையாளம் தெரியாத, லேபிள் இல்லாத, சந்தேகத்திற்குரிய சட்டவிரோத மதுவை அருந்துவதைத் தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மது அருந்திய பிறகு தலைச்சுற்றல், மங்கலான பார்வை, மூச்சுத் திணறல், சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும் காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.சிஎம்ஆர்எல் விசாரணை எல்டிஎஃப்-ஐ குறிவைக்கும் அரசியல் சதி! பினராயி விஜயன்