இந்தியாவுக்கு 4ஆவது தங்கம்: 10 எடிஷனில் 9 முறை சாம்பியன் ஆகியிருக்கும் ஆடவர் கபடி அணி!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கபடி அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. மகளிர் மற்றும் ஆடவர் கபடி அணிகள் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.ஆடவருக்கான கபடி இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஈரான் அணியும் மோதின. இதில் இந்தியா 40-34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வென்றது. முதல் பாதியில் ஈரான் 18-17 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளுமே சிறப்பாக விளையாடியது. பின்னர், ஒரு கட்டத்தில் முன்னிலை வகித்த இந்திய அணி தடுப்பாட்டத்தில் அசத்தி த்ரில் வெற்றி பெற்றது. மொத்தமாக 10 எடிஷனில் பங்கேற்ற இந்திய ஆடவர் அணி 9 முறை தங்கம் வென்றுள்ளது. 1990, 1994, 1998, 2002, 2006, 2010, 2014, 2018, 2022, 2026 ஆகிய எடிஷன்களில் 2018ல் மட்டுமே தங்கம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தமாக, இந்தியா ஆசிய விளையாட்டில் இதுவரை 4 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 28 பதக்கங்களை வென்றுள்ளது. ஸ்குவாஷ் பிரிவில் இரண்டு இந்தியர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.Back-to-back #AsianGames gold India's men's kabaddi team finish their #AichiNagoya2026 campaign on top, securing their 9th men's kabaddi gold in Asian Games history. ✨ pic.twitter.com/LWukC5tzNu— Olympic Khel ™ (@OlympicKhel) September 26, 2026India's 4th Gold in Asian games 2026: Men's Kabaddi team wins medal with a stellar defensive performance!