ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் சாந்தி - மகேந்திரன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ஜெம் வீரமணி பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது உதவியாளர் சாந்தி மற்றும் சாந்தியின் கணவரான மகேந்திர சிம்ஹன் இருவரும் காவலில் வைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, இவர்கள் இருவரும் ஜாமீன்கோரி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த நிலையில், சாந்தி - மகேந்திரனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டால், வழக்கில் சாட்சிகளைக் கலைக்கவோ, பாதிக்கப்பட்ட சிறுமிகள் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஜாமீன் வழங்கப்படும் பட்சத்தில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகளும் இருப்பதால், இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்சாரத் துறை அமைச்சர் நிகழ்ச்சியில் மின்வெட்டு: நிர்மல்குமார் விளக்கமும் மு.க.ஸ்டாலின் விமர்சனமும்!Police oppose bail for Shanthi - Mahendran in the Gem Veeramani sexual offense case