பழம்பெரும் மலையாள நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் காலமானார்! கேரள முதல்வர் இரங்கல்!

Wait 5 sec.

மலையாள திரைப்படம் மற்றும் நாடகத்துறையின் பழம்பெரும் நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் மலையாள மேடை நாடகங்களின் மூலம் மக்களிடையே நன்கு அறியப்படும் பழம்பெரும் நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் (வயது 83) புதன்கிழமை (செப். 23) காலை உடல் நலக் குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1961 ஆம் ஆண்டு கோழிக்கோடு மாவட்டத்தில் நடைபெற்ற மேடை நாடகங்களில் மூலம் அறிமுகமான நடிகை சாவித்திரி ஸ்ரீதரன் பழம்பெரும் மலையாள திரைக்கதை எழுத்தாளர்கள் கே.டி. முகமது, எம்.டி. வாசுதேவன் நாயர், டி. தாமேதரன், திக்கோடியன் ஆகியோரின் நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.நடிகை சாவித்திரி ஸ்ரீதரனின் மேடை நாடகங்கள் மக்களிடையே பிரபலமான நிலையில், அனியாரா எனும் நாடகத்திற்காக சிறந்த நடிகைக்கான சங்கீத நாடக அகாதெமி விருதைப் பெற்றார். மேலும், இவர் 2 முறை சிறந்த மேடை நடிகைக்கான கேரள மாநில விருதுகளையும் வென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான எம்.டி. வாசுதேவனின் கடவு எனும் திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமான நடிகை சாவித்திரி, மேரா நாம் சாஜி, வைரஸ், மேட் இன் சைனா போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இத்துடன், நடிகை சாவித்திரி கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் சக்கரியா முகமதின் “சுடானி ஃபிரம் நைஜீரியா” படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை (சிறப்புப் பிரிவு) வென்றிருந்தார். இந்த நிலையில், நடிகை சாவித்திரி ஸ்ரீதரனின் மறைவுக்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் ஏராளமான திரைப்பட நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.டோரதியில் நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்: கீர்த்தி சுரேஷ்Savithri Sreedharan, a veteran actress of the Malayalam film and theatre industries, has passed away.