சூரி, நிவின் பாலி, அஞ்சலியின் ஏழு கடல் ஏழு மலை பட டிரைலர்!

Wait 5 sec.

நடிகர்கள் சூரி, அஞ்சலி மற்றும் நிவின் பாலி இணைந்து நடித்துள்ள “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் இணைந்து நடித்துள்ள புதிய படம் “ஏழு கடல் ஏழு மலை”. இந்த நிலையில், “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (செப். 23) மாலை வெளியிட்டுள்ளனர்.இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், புதுமையான கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளன. நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற “ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில்” திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற “ஏழு கடல் ஏழு மலை” படம் வரும் அக்.1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.The trailer for the film "Ezhu Kadal Ezhu Malai," starring Soori, Anjali, and Nivin Pauly, has been released.