கேரள அரசின் பொது நிர்வாகத் துறையின் அதிகாரபூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கேரள அரசின் பொது நிர்வாகத் துறையின் அதிகாரபூர்வ இணையதளம், பாகிஸ்தான் கும்பலால் இன்று (செப். 27) காலை ஹேக் செய்யப்பட்டதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, டீம் பிளாக்லீட்ஸ் என்ற கும்பால் அரசின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதில் பாகிஸ்தான் கொடியும் பாகிஸ்தானுக்கான முழக்கமும் (slogan) திரையில் தோன்றியது.மேலும், அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் என்றும், ஒவ்வொரு நாளும் பல இணையதளங்களை அவர்கள் ஹேக் செய்து வருவதாகவும், இன்றைய நாளில் கேரள அரசின் இணையதளம் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.இணையதளம் முடக்கப்பட்டது கண்டறியப்பட்டவுடன் இணையதளத்தை முடக்கி விட்டோம். இணைதளத்தில் தரவு மீறல் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறோம். தொடர்ந்து, சரிபார்ப்புக்குப் பின்னர் இணையதளம் மீட்டெடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.போக்சோ வீரமணி வழக்கு: 100-க்கும் மேற்பட்ட சமூக ஊடகப் பக்கங்களுக்கு காவல்துறை எச்சரிக்கைKeralam GAD website hacked, suspected Pakistani group claims responsibility