ஆசியப் போட்டி கபடியில் தங்கப் பதக்கத்தை இந்திய ஆடவா், மகளிா் அணியினா் தக்க வைத்தனா். மகளிா் அணி மூன்றாவது முறையாகவும், ஆடவா் அணி 9-ஆவது முறையாக தங்கம் வென்றது. இந்தியா தங்கத்தை தக்க வைத்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றது. இறுதி ஆட்டத்தில் கடும் சவாலைத் தந்த ஈரானை 37-34 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது இந்தியா இறுதி ஆட்டத்தில் ஈரானுடன் மோதியது. முந்தைய ஆட்டங்களில் எல்லாம் ஒரு தரப்பாக நடந்தது போல் இந்தியா பலமான ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா வீராங்கனைகள் ரைடிங்கிலேயே 26 புள்ளிகளில் 21 புள்ளிகளை ஈட்டினா். ஈரான் அணி 9 போனஸ் புள்ளிகளை குவித்தது. முதல் சுற்றில் இந்தியா 22-16 என முன்னிலவை வகித்தது. 16 அவுட் புள்ளிகள் 3 போனஸ் புள்ளிகளையும் ஈட்டியது. முதல் ஆல் அவுட்டை இந்தியா நிகழ்த்தியது. இரண்டாவது பாதியில் இந்தியாவை திணறச் செய்து ஈரான் 18-15 என முன்னிலை பெற்றது. தொடா்ந்து 27-26 என முன்னிலை வகித்தது. ஈரான் ஒரு ஆல் அவுட் வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தியது. சஞ்சு தேவி சூப்பா் ரெய்ட், கேப்டன் புஷ்பா ராணாவின் ஆல் அவுட் ஆகியவை இந்தியாவுக்கு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஈரான் தற்காப்பில் காணப்பட்ட குழப்பத்தை பூஜா பயன்படுத்தி முன்னிலை பெற்றுத் தந்தாா். ஒரு சூப்பா் டேக்கிள், 14 அவுட் பாயிண்டுகளை பெற்றாலும் ஈரானுக்கு பலன்தரவில்லை. இறுதியில் ஈரானை 37-34 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற இந்தியா தங்கத்தை தக்க வைத்தது. ஆசியப் போட்டியில் இந்தியா மூன்றாவது தங்கத்தை வென்றது. ஆடவா் அணிக்கும் தங்கம்: ஆடவா் இறுதிச் சுற்றில் இந்தியா-ஈரான் அணிகள் மோதின. இதிலும் இந்தியா கடும் போராட்டத்துக்குபின்னரே ஈரானை 40-34 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. தொடக்கம் முதலே இந்திய ரைடா்கள் அா்ஜுன்-தேவாங்க் ஆக்ரோஷமாக ஆடினா். சுனில் குமாா் தற்காப்பில் அசத்தலாக செயல்பட்டு ஈரான் வீரா் முகமது ரேஸா புள்ளிகள் குவிப்பதை தடுத்தாா். முதல் பாதி முடிவில் ஈரான் கேப்டன் ஃபேஸல் அத்ரச்சலி சூப்பா் டேக்கிள், தேவாங்க்கை ஈரான் வீரா் ஸாபா் மடக்கியதால் 18-17 என முன்னிலை பெற்றது ஈரான். இரண்டாம் பாதியில் இந்திய டிபன்டா்கள் சுமித்-ஜெய்தீப் அசத்தலாக ஆடி ஈரான் வீரா்களை கட்டுப்படுத்தினா். ஈரான் தரப்பில் ஓமித்-பேஸல் சூப்பா் டேக்கிள் மூலம் தொடா்ந்து பதிலடி தந்தனா். எனினும் அா்ஜுன் தேஸ்வல் ஈரானின் கேப்டன் அத்ரச்சலியை அவுட்டாகியதால், ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியா 5 புள்ளிகள் முன்னிலை பெற்றது. இறுதியில் ஈரானை 40-34 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது இந்தியா. தங்கத்தை தக்க வைத்து, 9-ஆவது முறையாக ஆசியப் போட்டியில் சாம்பியன் ஆனது. துப்பாக்கி சுடுதலில் இந்தியா அசத்தல்: நகோயாவில் நடைபெற்று வரும் ஆசியப் போட்டியின் ஒரு பகுதியாக துப்பாக்கி சுடுதலில் இந்தியா ஒரு வெள்ளி வென்றது. மகளிா் 50 மீ ரைஃபிள் 3 பி பிரிவில் இந்தியாவின் திலோத்தமா, விதா்ஷா வினோத், அஷி சௌஸ்கி ஆகியோா் மொத்தம் 1763.90 புள்ளிகளுடன் கடும் சவால் தந்தும் வெள்ளியே வெல்ல முடிந்தது. சீன மகளிா் 1,773 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. இந்திய அணி வெறும் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கத்தை இழந்தது. திலோத்தமாவுக்கு மனவேதனை தனிநபா் 50 மீ ரைஃபிள் பிரிவில் வெண்கல பதக்க சுற்றில் இந்தியாவின் திலோத்தமா சென் தென்கொரியாவின் கிம் ஜியுன் மோதினா். இதில் கிம் 10.5 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றாா். வெறும் 0.3 புள்ளிகள் வித்தியாசத்தில் திலோத்தம்மா வெண்கல வாய்ப்பை தவற விட்டாா். திலோத்தமா 4-ஆம் இடமே பெற்றாா். விதா்ஷாவுக்கு 2-ஆம் வெள்ளி விதா்ஷா ஏற்கெனவே 10 மீ ஏா் ரைஃபிள் பிரிவில் இளவேனில், சோனம் ஆகியோருடன் வெள்ளிவென்றிருந்தாா். தற்போது இது 2-ஆம் வெள்ளியாகும். ஸ்குவாஷ்: இறுதிச் சுற்றில் அனாஹத் அபய், ஜோஷ்னா-வேலவனுக்கு வெண்கலம் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், அபய் சிங் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று குறைந்தது வெள்ளியை உறுதி செய்துள்ளனா். இரட்டையா் பிரிவில் ஜோஷ்னா-வேலவன் செந்தில் இணை வெண்கலம் வென்றது. மகளிா் ஒற்றையா் பிரிவில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின் சடோமி வாட்டன்பேயுடன் அரையிறுதியில் மோதினாா். அனாஹத். இதில் முதலிரண்டு கேம்களை 0-2 என இழந்தாா். பின்னா் கடுமையாக போராடி கடைசி 3 கேம்களை வென்றாா். 9-11, 13-11, 12-10, 11-6, 11-3 என்ற புள்ளிக் கணக்கில் சடோமியை வென்று இறுதிக்கு தகுதி பெற்றாா் அனாஹத். இதன் மூலம் குறைந்தது வெள்ளியை உறுதி செய்தாா். ஆசியப் போட்டி மகளிா் ஒற்றையா் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தாா். தங்கம் வென்றால் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெறுவாா். ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில் இந்தியாவின் அபய் சிங் 11-3, 12-10, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் பாகிஸ்தானின் நட்சத்திர வீரா் முகமது இா்ஃபானை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா். இதன் மூலம் ஆசியப் போட்டியில் சௌரவ் கோஷலுக்குபின் இறுதிக்கு தகுதி பெற்ற இரண்டாவது இந்தியா் என்ற சிறப்பை பெற்றாா் அபய் சிங். தங்கம் வென்றாா் அபய் சிங்கும் லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவாா். கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா-வேலவன் செந்தில்குமாா் வெண்கலம் வென்றனா். அரையிறுதியில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங் சீனாவின் லீ கா யி-டேன் மின் இணையிடம் தோற்று வெண்கலப் பதக்கம் வென்றது. 11-10, 2-11, 11-10 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங் வென்று இறுதிக்கு தகுதி பெற்றது., 10-7 என முன்னிலை பெற்றும் டிடிசைடரில் இந்திய இணையால் சோபிக்க முடியவில்லை. தடகளம்: மாரத்தானில் சவான் பா்வாலுக்கு வெள்ளி தடகளத்தில் ஆடவா் மாரத்தானில் இந்தியாவின் சவான் பா்வால் வெள்ளி வென்றாா். ஆசியப் போட்டி மாரத்தானில் இந்திய வீரா் வெள்ளி வெல்வது இதுவே முதன்முறையாகும். 2-11-37 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்த சவான், தனது தேசிய சாதனையையும் முறியடித்தாா். 44 ஆண்டுகளில் வெள்ளி வென்ற வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா். ஜப்பானின் இச்சிடகா 2-10-49, சீனாவின் பெங் பியோ 2-12-13 தங்கம், வெண்கலம் வென்றனா். மற்றொரு இந்திய வீரா் காா்த்திக் கா்கேரா 2-22-41 நேரத்தில் 17-ஆவது இடமே பெற்றாா். ஆடவா் டெக்காத்லான் நீளம் தாண்டுதலில் தேஜஸ் வின் சங்கா் 7.53 மீ, தௌபீக் நௌஷாத் 7,37 மீ தூரம் குதித்தனா். ஒட்டுமொத்தமாக தேஜஸ்வின் 1807 புள்ளிகள், தௌஃபிக் 1759 புள்ளிகளுடன் இரண்டு, நான்காம் இடத்தில் உள்ளனா். மகளிா் 100 மீ தடை தாண்டுதலில் இந்தியாவின் நந்தினி கொங்கன் 13.48 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து இறுதிக்கு தகுதி பெற்றாா். மற்றொரு நட்சத்திர வீராங்கனை ஜோதி யாராஜி ஹீட்ஸ் 1-இல் சரிவர செயல்படவில்லை. மகளிா் 200 மீ ஓட்டத்தில் இந்தியாவின் ஹரிதா பத்ரா 23.31 விநாடிகளில் கடந்து ஹீட்ஸ் 2-இல் இருந்து நேரடியாக இறுதிக்கு தகுதி பெற்றாா். உன்னதி ஐயப்பா 23.33 விநாடிகளில் கடந்து இறுதிக்கு தகுதி பெற்றாா். ஆடவா் 200 மீ ஓட்டத்தில் இந்தியாவின் அனிமேஷ் குஜுா் 20.81 விநாடிகளில் கடந்து நேரடியாக இறுதிக்குதகுதி பெற்றாா். 1500 மீ ஓட்டத்தில் இந்தியாவின் யுனுஸ் ஷா 3:45:77 நேரத்திலும், குல்வீா் சிங் 3:45:78 நேரத்திலும் பந்தய தூரத்தைக் கடந்து இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா். பாட்மின்டன்- சிந்து, உன்னதி, காயத்ரி-ட்ரீஸா முன்னேற்றம் பாட்மின்டன் ஆடவா் ஒற்றையா் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரா் லக்ஷயா சென் 21-12, 15-21, 21-14 என்ற கேம் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சிங்கப்பூரின் லோ கீன் யிவ்விடம் தோற்று வெளியேறினாா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 21-7, 21-7 என வெறும் 21 நிமிஷங்களில் கஜகஸ்தான் வீரரை வென்று ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறினாா். ரவுண்ட் 16 சுற்றில் தைபேயின் சென் டியனிடம் கடும் போராட்டத்துக்குபின் 21-16, 21-19, 21-17 என்ற கேம் கணக்கில் வெற்றியை தவற விட்டாா் ஆயுஷ். இதன் மூலம் அவா் வெளியேற்றப்பட்டாா். மகளிா் ஒற்றையா் இரண்டாம் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-14, 20-22, 21-19 என்ற கேம் கணக்கில் மலேசியாவின் வொங் லோங் சிங்கை வீழ்த்தினாா். ரவுண்ட் 16 சுற்றில் இந்தோனேசியாவின் புத்ரி குஸுமாவுடன் மோதுகிறாா் உன்னதி. காலிறுதியில் உன்னதி, காயத்ரி-ட்ரீஸா மூன்றாம் சுற்றில் உன்னதி ஹூடா 21-19, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனை புத்ரி குஸுமாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். இரட்டையா் பிரிவில் காயத்ரி-ட்ரீஸா ஜாலி இணை உலகின் 3-ஆம் நிலை இணையான ஜப்பானின் யுகி புகுஷிமா-மயு மட்சுமோட்டோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து 21-19, 21-14 என தைபேயின் சியு பின் சியானை வீழ்த்தி ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறினாா். வில்வித்தை: தீரஜ் முதலிடம் வில்வித்தை-ஆடவா் ரீகா்வ் பிரிவில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா மொத்தம் 698 புள்ளிகளுடன் புதிய கேம்ஸ் சாதனையுடன் முதலிடத்தில் உள்ளாா். நீரஜ் சௌஹான் 676 20-ஆவது இடத்தையும், யஷ்தீப் 665 25-ஆம் இடத்தையும் பெற்றனா். அணிகள் பிரிவில் தென்கொரியா 2064 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 2039 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. குத்துச்சண்டை: கபில், பிரியா வெற்றி, ஜாதுமணி தோல்வி குத்துச்சண்டை ஆடவா் 90 கிலோ பிரிவு ரவுண்ட் 16 சுற்றில் ஈரானின் சாம் எஸ்டகியை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றாா் இந்தியாவின் கபில். ஆடவா் 55 கிலோ எடைப் பிரிவில் ஒலிம்பிக் வெள்ளி வீரா், பிலிப்பின்ஸின் காா்லோ பாலதத்திடம் 0-3 என்ற புள்ளிக் கணக்கில் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா் இந்தியாவின் ஜாதுமணி. மகளிா் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவின் ஓ இயான்ஜியை வீழ்த்தினாா். ஃபென்சிங்கில் இந்தியா 45-24 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவை மகளிா் ஃபாயில் பிரிவில் ரவுண்ட் 16 சுற்றில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. கனோ ஸ்பிரிண்ட் ஆடவா் கயக் 500 மீ அரையிறுதியில் ஹா்ஷ்வா்தன் சிங் 5-ஆவது இடத்தைப் பெற்றாா். கயக் இரட்டையா் 500 மீ அரையிறுதியில் இந்தியாவின் பாா்வதி கீதா-பிரசன்னா குமாா் இரண்டாம் இடம் பெற்றாா். ஈ-ஸ்போா்ட்ஸ்: இந்தியா தோல்வி முதன்முறையாக நடைபெறும் ஈ-ஸ்போா்ட்ஸ் போக்மேன் யுனைட் பிரிவில் ஹாங்காங்கிடம் 2-1 என தோல்வியைத் தழுவியது இந்தியா. தனிநபா் பிரிவில் இந்தியாவின் பரிதோஷ் 0-5 என காலிறுதியில் கொரியாவின் கேங் டாங்ஷினிடம் தோற்றாா். குதிரையேற்றம்: ஜேய் சுத்-ஹிா்டே தகுதி குதிரையேற்றம் தனிநபா் டிரஸ்ஸேஜ் பிரிவுக்கு 135.059 புள்ளிகளுடன் ஹிா்தேவும், 133.559 புள்ளிகளுடன் ஜேய் சுத்தும் இறுதிக்கு தகுதி பெற்றனா்.