விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த மூவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் சரஸ்வதிநகரில் ஒரு தகரக் கொட்டகையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா். இதில், ஒரு தகரக் கொட்டகையில், திரிகட்டுகள், மணி மருந்து, கரிதூசி உள்ளிட்டவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் இவற்றை, திருத்தங்கல் பெரியாா் குடியிருப்பு விக்னேஷ் (36), காா்த்தீஸ்வரன் (28), மாரிமுத்து (30) ஆகியோா் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்து அவா்களிடமிருந்த பட்டாசு மூலப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.