பாவூா்சத்திரம் அருகே நான்கு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

Wait 5 sec.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே செல்வவிநாயகபுரத்தில் மளிகைக் கடை, மருந்துக் கடை உள்ளிட்ட 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். பாவூா்சத்திரம் அருகே உள்ள செல்வவிநாயகபுரத்தில் மளிகைக் கடை, மருந்துக் கடை, பழக்கடை, காய்கனி கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டனா். அப்போது, அங்கு வந்த மா்ம நபா்கள் நான்கு கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து, கடைகளில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், திருட்டுச் சம்பவம் தொடா்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகாமல் தடுக்கும் நோக்கில், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் பதிவாகும் கருவியையும் மா்ம நபா்கள் எடுத்துச் சென்றுள்ளனா். இதுகுறித்த புகாா்களின் பேரில் , பாவூா்சத்திரம் போலீஸ்ாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.