நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசில், குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் நடிப்பில் மாயாஜாலம் கலந்த கதையாக உருவான திரைப்படம் ’டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ( Don’t Trouble the Trouble).மேஜிக் கலைஞரான ஃபஹத்துக்கு குழந்தை சாராவுக்கும் இடையேயான சுவாரஸ்யமான ஃபேன்டசி படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளத்திலும் வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் கால பைரவா இசையமைத்துள்ளார்.இப்படம் செப். 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிச்சென்றது. தற்போது, இப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. டிரைலரின் தமிழ் பதிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.ஜெயிலர் - 2 படத்தின் அடுத்த பாடல் அப்டேட்!The trailer of Fahadh Faasil's Don't Trouble The Trouble is out!