இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இங்கிலாந்து - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 22) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.கேப்டன் ஹாரி ப்ரூக் அரைசதம்; இலங்கைக்கு 266 ரன்கள் இலக்கு!டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்கள் முடிவில் 265 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹாரி ப்ரூக் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 69 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 46* ரன்கள், ஜோ ரூட் 44 ரன்கள், பென் டக்கெட் 32 ரன்கள், ஜோஸ் பட்லர் 31 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.இலங்கை தரப்பில் அஷிதா ஃபெர்னாண்டோ மற்றும் சச்சிந்து கொலம்பேஜ் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தில்ஷன் மதுஷங்கா, துஷ்மந்தா சமீரா மற்றும் துனித் வெல்லாலகே தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.Batting first in the first ODI against Sri Lanka, the England team was bowled out for 265 runs.ஆசியப் போட்டியில் அசத்திய ஷஃபாலி வர்மா; ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம்!