ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டியை மீட்டு தாயுடன் சேர்த்த மீனவர்கள்! விடியோ வைரல்

Wait 5 sec.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டியை மீனவர்கள் மீட்டு, அதன் தாயுடன் சேர்த்து வைத்த விடியோ வைரலாகி வருகின்றது.மேற்கு வங்கத்தின் மால்பஜார் பகுதியில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிறந்து சில நாள்களே ஆன யானைக்குட்டி ஒன்று இந்த வெள்ளத்தில் அடித்துச் சென்றது.இந்த நிலையில், அந்த யானைக் குட்டியின் தாய் கரையில் நின்று செய்வதறியாமல் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் துரிதமாக செயல்பட்டு, படகின் மூலம் ஆற்றில் அடித்துச்சென்ற யானைக் குட்டியை நோக்கிச் சென்றனர்.சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை அடித்துச்சென்ற யானைக் குட்டியை படகில் துரத்திச் சென்று, அதனை பத்திரமாக ம்ீட்டு படகில் ஏற்றினர். பின்னர் கரைக்கு வந்து, காத்துக் கொண்டிருந்த தாய் யானையுடன் அதன் குட்டியைச் சேர்த்தனர்.இந்த நெகிழ்ச்சி சம்பவம் விடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது அது வைரலாகி வருகிறது. மேலும், இந்த அசாத்திய செயலைச் செய்த மீனவர்களுக்கு இணையவாசிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.#DINAMANI | ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக் குட்டி! மீட்டு தாயிடம் சேர்த்த மீனவர்கள்! | West Bengal#ElephantRescue #BabyElephant #WestBengal #WildlifeRescue #FishermenHero #AnimalRescue #MotherElephant #IncredibleIndia #Heartwarming #Humanity pic.twitter.com/doKPqzlos7— தினமணி (@DinamaniDaily) September 22, 2026கேரளத்தில் பெருகிவரும் போலி பங்கு முதலீட்டு மோசடிகள்: காவல்துறை எச்சரிக்கை!A video showing fishermen rescuing an elephant calf that had been swept away by a river and reuniting it with its mother is going viral.