மதுரையில் நாளை முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?

Wait 5 sec.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக நாளை(செப். 28) மதுரை வருகை தரும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், ரூ.10.25 கோடி மதிப்பீட்டில் மறு சீரமைக்கப்பட்டுள்ள மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தையும் தொடங்கி வைக்கிறார். பிறகு மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.முதல்வர் ஜோசப் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9 மணி அளவில் மதுரை வருகிறார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை நாளை நண்பகல் 12 மணியளவில் தொடக்கி வைக்கிறார்.கடந்த 2026 ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியான குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் என அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்காக தமிழக அரசு ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதல்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மோதிரத்திற்கும் தனித்துவமான வரிசை எண் மற்றும் பாதுகாப்பான பேக்கேஜிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் முதல்வர் ஜோசப் விஜய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அன்றைய நாள் பிறக்கும் குழந்தைகளை சந்தித்து அவர்களுக்கு மோதிரம் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.ரூ. 10.25 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். அங்கு சுதந்திரப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியின் தமிழகப் பயணம் உள்ளிட்ட தகவல்களை நவீன டிஜிட்டல் மற்றும் தொடுதிரை தொழில்நுட்பங்கள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள குமரப்பா குடில், திறந்தவெளி அரங்கம் உள்ளிட்ட பகுதிகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டரை ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 28-ஆம் தேதி அருங்காட்சியகம் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்?நாளை மாலை 4 மணியளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று முதல்வர் ஜோசப் விஜய் தரிசனம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து, முதல்வர் கோயில் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன், சுவாமி சன்னதியில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த முதல்வர் ஜோசப் விஜய்யிடம் உறுதிமொழி எழுதிவாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், மாற்று மதத்தினர் உறுதிமொழி எழுதிக்கொடுத்துவிட்டு தரிசனம் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதல்வரிடம் இந்து மதத்தின் மீது நம்பிக்கை உண்டு என உறுதிமொழி எழுதி வாங்கப்படும் அல்லது அதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்து பெறப்படும் எனத் தெரிவித்தனர்.மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முதல்வர் வருவது பயணத்திட்டத்தில் இல்லை என போலீஸார் தெரிவித்தனர். பின்னர், மதுரை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மாலை 5 மணிக்கு முதல்வர் சென்னை புறப்பட்டு செல்கிறார்.முதல்வர் வருகையை முன்னிட்டு அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகம், விமான நிலையம், காந்தி அருங்காட்சியகம், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அவர் பயணிக்கும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.Tamil Nadu Chief Minister C. Joseph Vijay, who is visiting Madurai tomorrow (Sept. 28) to launch the 'Thaimaman Thanga Mothiram' (Maternal Uncle's Gold Ring) scheme, will also inaugurate the Madurai Gandhi Memorial Museum, which has been renovated at a cost of rs. 10.25 crore.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் நாளை தரிசனம்!