ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பாட்மின்டன் வீராங்கனைகள் பிவி சிந்து, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதியில் தோல்வியுற்று, பதக்க வாய்ப்பை இழந்தார்கள். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.இதில் மகளிருக்கான ஒற்றையர் பாட்மின்டன் போட்டியில் காலிறுதியில் இரண்டு இந்தியர்கள் வெவ்வெறு வீராங்கனைகளுடன் மோதினார்கள். பிவி சிந்து சீன வீராங்கனை சென் யுஃபேயுடன் 1-2 என்ற கேம்களில் (21-11, 18-21, 10-21) என்ற கேம்களில் தோல்வியுற்றார். முதல் கேமில் வென்ற பிவி சிந்து இரண்டாவது கேமில் இறுதியில் பதக்க வாய்ப்பை இழந்தார்.மற்றுமொரு வீராங்கனை உன்னாட்டி ஹூடா ஜப்பான் வீராங்கனை உடன் 1-2 என்ற கேம்களில் (16-21, 21-14, 17-21) தோல்வியுற்றார். இத்துடன் இந்தியாவின் பாட்மின்டன் பயணம் ஆசிய விளையாட்டில் முடிவுக்கு வருகிறது. இதுவரை இந்திய அணி 30 பதக்கங்களை வென்றுள்ளன. Asian Games 2026 | BadmintonWomen’s Singles – QuarterfinalPV Sindhu (WR-11, TOPS Core) fought hard against Chen Yu Fei (WR-4) of China before going down 1–2.Game Scores: 21–11, 18–21, 10–21With this result, India’s badminton campaign at the Asian Games 2026 comes to an… pic.twitter.com/7FRVpUNHcz— SAI Media (@Media_SAI) September 27, 2026Asian Games 2026 | Badminton (Women's Singles - Quarterfinals)Our very own Unnati Hooda (WR-24, TOPS Development Athlete) puts up a brave fight against 3-time World Champion Akane Yamaguchi (WR-3, Japan) before losing in a close match by 1-2 (16-21, 21-14, 17-21)Debutant… pic.twitter.com/P9LxvPQIdp— SAI Media (@Media_SAI) September 27, 2026இந்தியாவுக்கு 30ஆவது பதக்கம்: 400 மீ. தடகளத்தில் வெண்கலம் வென்ற வீராங்கனை! Badminton: PV Sindhu and Unnati Hooda miss out on medal chances at Asian Games 2026!