சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைந்ததால் பட்டாசுகளின் விலை உயர்த்தப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவிகித அளவுக்கு சிவகாசியில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 10 சதவிகிதம் தமிழகத்திலும், 90 சதவிகிதம் வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு தீபாவளி திருநாள் சமயத்தில், தமிழகத்தில் ரூ. 450 கோடிக்கும், நாடு முழுவதும் ரூ. 6,000 கோடிக்கும் பட்டாசு வர்த்தகம் நடைபெற்றது.இந்தாண்டில் நவம்பர் 8 ஆம் தேதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்தாண்டு பட்டாசு உற்பத்தியில் சுமார் 30 சதவிகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.மேற்காசிய நாடுகளின் போர் காரணமாக பட்டாசு மூலப்பொருள்களின் விலை உயர்வு, உற்பத்தி ஆலைகளில் தொடர் வெடி விபத்து காரணமாக உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ஆலைகளுக்குத் தாமதமாக வழங்கப்பட்ட அனுமதி உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவானதையடுத்து, பட்டாசுகளின் விலை 25 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.போக்சோ வீரமணியால் பள்ளி மாணவி தற்கொலை? 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்Firecracker prices rise in Sivakasi due to reduced production