நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் அசத்தலான வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் சூரியின் மண்டாடி மற்றும் நடிகர் கார்த்தியின் சர்தார் - 2 திரைப்படங்கள் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில், சர்தார் - 2 கலவையான விமர்சனங்களையும் மண்டாடி நல்ல விமர்சனங்களையும் பெற்றன. இதனால், மண்டாடி திரைப்படத்திற்குத் திரைகள் அதிகரித்தன.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ராமநாதபுரம் கடலோடிகளின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவானது.இப்படத்தில் இடம்பெற்ற படகுப்போட்டி காட்சிகள் ஆச்சரியப்படும்படி எடுக்கப்பட்டதால் ரசிகர்களின் விருப்பமான படமாக மாண்டாடி மாறியது. இந்த நிலையில், இப்படம் 3-வது வாரத்திலும் பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகத் திரையிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே, ரூ. 125 கோடிக்கும் மேல் வசூலித்த இப்படம் இன்னும் சில நாள்களில் ரூ. 150 கோடியை எட்டலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப்படங்களில் பெரிய வெற்றியைப் பெற்ற கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த இடத்தில் மண்டாடியே இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சூரியின் முதல் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் என்பதால் அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உங்கப்பாவைப் போல்... ஜேசன் சஞ்சயை வாழ்த்திய நாகர்ஜுனா!Actor Soori's film Mandaadi is receiving a fantastic reception.