ஐரோப்பியாவின் நேஷன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-3 என்ற கோல் கணக்கில் நடப்பு உலக சாம்பியன் ஸ்பெயின் வென்றது. கிளப் போட்டிகளுக்கு இடைவெளி விடுக்கப்பட்டு தேசிய அணிகளுக்கான கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஐரோப்பியாவின் மிகப்பெரிய கோப்பையான நேஷன்ஸ் லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் லண்டனில் இருக்கும் விம்ளே திடலில் ஸ்பெயினுடன் மோதியது. இந்தப் போட்டியில் 2ஆவது நிமிஷத்தில் ஸ்பெயினின் லமின் யமால் கோல் அடித்தார். இங்கிலாந்து அணி 36ஆவது நிமிஷத்தில் ஜோர்டான் கோல் அடிக்க, 40ஆவது நிமிஷத்தில் ஹாரி கேன் மற்றுமொரு கோல் (குகரேலா ஓன் கோல்) அடித்து 2-1 என முதல் பாதி முடிவில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்த ஸ்பெயின் அணி 60, 74ஆவது நிமிஷங்களில் முறையே அலெக்ஸ் பீனா, மைக்கேல் ஓயர்ஜபால் கோல் அடித்து 3-2 என முன்னிலைப் பெற்றது. ஹாரி கேனுக்கு 54ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் கோலாக மாற்றவில்லை. இந்தத் தவறினால் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. மேலும் தடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி மோசமாக விளையாடியது. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 52 சதவிகித நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இங்கிலாந்து அணி வீரர்களில் மூவருக்கு மஞ்சள் கார்டுகள் அளிக்கப்பட்டன.ஆசிய விளையாட்டு: பதக்க வாய்ப்பை இழந்த பிவி சிந்து, உன்னாட்டி ஹூடா!Oyarzabal earns Spain Nations League win as England pay for Kane penalty miss