வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை அறிவிப்பு!

Wait 5 sec.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் அபய் சிங்கிற்கு ஊக்கத் தொகையாக ரூ.50 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக வீரர், வீராங்கனைகளும் பங்கேற்று, சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் அபய் சிங் வெள்ளி வென்றுள்ளார். இது குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய நாட்டிற்காக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அபய் சிங் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் Elite Scheme திட்டத்தில் பயிற்சி பெற்றுவரும் அபய் சிங், பல்வேறு உலகளவிலான போட்டிகளில் திறம்பட விளையாடி உலக அரங்கில் தமிழகத்திற்குப் புகழ் சேர்த்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத் தொகையினை (High Cash Incentive) பெறும் அபய் சிங் அவர்கள், இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மேலும் பெருமைகள் சேர்க்கும் விதமாக வெற்றிப் பயணத்தைத் தொடர எனது பாராட்டுகள். இவரது சாதனைகள், அபாரமான உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்தால் வெற்றிக்கொடி நாட்டலாம் என்று தமிழக இளைஞர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 'Men's Singles Squash' பிரிவில், இந்திய நாட்டிற்காக வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் அபய் சிங் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு விளையாட்டு… pic.twitter.com/OPpkaTCBQ0— Aadhav Arjuna (@AadhavArjuna) September 27, 2026Silver for Abhay Singh! Abhay Singh gave his best but went down 0–3 to Malaysia’s Ng Eain Yow in the Men’s Singles final.#Cheer4Bharat #AsianGames2026 pic.twitter.com/qwJWqHdlML— Doordarshan Sports (@ddsportschannel) September 27, 2026ஆசிய விளையாட்டு: பதக்க வாய்ப்பை இழந்த பிவி சிந்து, உன்னாட்டி ஹூடா!₹50 lakh cash incentive announced for the Tamil Nadu athlete abhay singh who won silver at asian games 2026