நேபாளத்தில் தொடா் மழை, நிலச்சரிவு: 72 மணி நேரத்தில் 14 பேர் பலி

Wait 5 sec.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை மற்றும் நிலச்சரிவுக்கு கடந்த 72 மணி நேரத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. மத்திய நேபாளத்தில் உள்ள நாராயணி நதி 9 மீட்டர் என்ற அபாய அளவைத் தாண்டி குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கான முக்கிய மையமாகத் திகழும் சித்வான் நகர் நெடுஞ்சாலைகளும் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை மாலை வரை மழையால் ஏற்பட்ட பேரிடர்களில் 6 பேர் பலியாகினர். மேலும் ஞாயிற்றுக்கிழமை காலை மியாக்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் பலியாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, அருகிலுள்ள பாக்லுங் மாவட்டத்திலும் ஏற்பட்ட நிலச்சரிவில் மேலும் 4 பேர் பலியானதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். தொடர்ந்து பல இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர் மழையால் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, வெள்ளப்பெருக்கு மற்றும் வெள்ள அபாயத்தைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினர் மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, ஆயிரக்கணக்கானோரைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.Relentless rainfall since Thursday has killed at least 14 people all across Nepal, with inundation, flooding and landslides reported from all across the nation, prompting alerts and warnings.திமுகவுக்கு ஆதரவளித்து அதிமுகவுக்கு குழிதோண்டும் இபிஎஸ்: நிர்மல் குமார்