திமுகவுக்கு ஆதரவாகப் பேசி, அதிமுகவை குழிதோண்டி எடப்பாடி பழனிசாமி புதைக்க முயற்சிப்பதாக தவெக அமைச்சர் நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "திமுகவும் அதிமுகவும் நன்றாக ஆட்சி செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். சமீபமாக திமுகவுக்கும் சேர்த்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அவர் அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கிறாரா அல்லது திமுகவுக்காக வாக்கு சேகரிக்கிறாரா என்பதே தெரியவில்லை.திமுகவுக்காக அவர் பேசி வருகிறார். அதே சமயம், அதிமுக எம்எல்ஏ-க்கள் ஏன் ராஜிநாமா செய்கின்றனர் என்றும் அவர் கேட்கிறார். திமுகவுக்காக பேசும் உங்களை நம்பி எப்படி அதிமுகவினர் பயணிக்க முடியும்?திமுகவுக்காகவும் மு.க. ஸ்டாலினுக்காகவும் நீங்கள் பேசும்போதும், உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்குவதற்கு நீங்கள் முயற்சிக்கும்போதும் உங்களுடன் அதிமுகவினர் பயணிப்பார்களா?அதிமுகவின் தூண்களாக இருந்த முக்கிய தலைவர்கள் அனைவரும் இன்று அக்கட்சியைவிட்டு வெளியேறியதற்கான முக்கிய காரணம், திமுகவுக்கு ஆதரவாகப் பேசுவதுதான்.அதிமுகவை குழிதோண்டி புதைக்காமல் அவர் (இபிஎஸ்) விடமாட்டார். அது எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் செய்கிற மிகப்பெரிய துரோகம். அதிமுகவை மூட்டை கட்டி, பரணில் வைக்காமல் அவர் விடமாட்டார்" என்று தெரிவித்தார்.போக்சோ வீரமணியால் பள்ளி மாணவி தற்கொலை? 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்Minister Nirmal Kumar criticizes ADMK Secretary Edappadi Palaniswami for speaking in support of the DMK