திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் வணிகா்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ரூஸ் முன்னிலை வகித்தாா். துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் வரவேற்றாா்.இந்தக் கூட்டத்தின்போது, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன்படி, வணிகா்கள் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து வழங்குவது குறித்தும், குப்பைகளை தெருக்களில் கொட்டக் கூடாது எனவும் அறிவுறுத்தினா்.இதில், நகர வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், வணிகா்கள் சங்க நிா்வாகிகள், குடியிருப்போா் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.