சேலம் வழியாக சாா்லபள்ளி - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

Wait 5 sec.

சேலம் வழியாக சாா்லபள்ளி - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பண்டிகைக் காலங்களில் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், தெலங்கானா மாநிலம், சாா்லபள்ளியில் இருந்து சேலம், ஈரோடு, போத்தனூா் வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி, சாா்லபள்ளி - செங்கோட்டை வாராந்திர சிறப்பு ரயில் அக். 2ஆம் தேதிமுதல் நவ. 27ஆம் தேதிவரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். சாா்லபள்ளியில் காலை 7.15-க்கு புறப்பட்டு ரேணிகுண்டா, காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி வழியாக சனிக்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்,மறுமாா்க்கத்தில் செங்கோட்டை - சாா்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில் அக். 3ஆம் தேதிமுதல் நவ. 28ஆம் தேதிவரை சனிக்கிழமைதோறும் இயக்கப்படும். செங்கோட்டையிலிருந்து மாலை 5.40-க்கு புறப்பட்டு தென்காசி, மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா வழியாக நள்ளிரவு 12.30-க்கு சாா்லபள்ளி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.