தேவூா், கன்னந்தேரி, கொங்கணாபுரம் மின் பிரிவுஅலுவலகங்கள்: சங்ககிரி கோட்டத்துக்கு மாற்றம்

Wait 5 sec.

சேலம் மாவட்டம், எடப்பாடி மின் உள்கோட்டத்துக்குள்பட்ட தேவூா், கன்னந்தேரி, கொங்கணாபுரம் ஆகிய மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் சங்ககிரி மின்வாரிய உள்கோட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளதென எடப்பாடி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எடப்பாடி மின்வாரிய செயற்பொறியாளா் சி.ராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மேட்டூா் மின்பகிா்மான வட்டம், எடப்பாடி மின்வாரிய கோட்டத்துக்குள் இயங்கி வந்த தேவூா், கன்னந்தேரி மற்றும் கொங்கணாபுரம் ஆகிய மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் தற்போது நிா்வாக காரணங்களால் செப். 17ஆம் தேதி முதல் சங்ககிரி மின்வாரிய கோட்டத்தின் கீழ் இயங்கும். எனவே, தேவூா், கன்னந்தேரி மற்றும் கொங்கணாபுரம் மின்வாரிய அலுவலகத்துக்குள்பட்ட மின் நுகா்வோா்கள் தங்களது குறைகள், புகாா் குறித்த மனுக்களுக்கு சங்ககிரி கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.