டிராக்டா் டிரெய்லா் மோதி இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

Wait 5 sec.

பரமத்தி வேலூா் அருகே டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த டிரெய்லரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே கண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்முருகன் (49), கூலித் தொழிலாளி. இவா், ஆனங்கூா் அருகே கழுவங்காடு பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.அப்போது, அண்ணாநகா் பகுதியில் பாஸ்கா் என்பவருக்குச் சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்வதற்காக, தருமபுரியைச் சோ்ந்த ஓட்டுநா் ஆனந்த் என்பவா் டிராக்டரில் 2 டிரெய்லா்களை இணைத்துக் கொண்டு எதிரே வந்தாா்.அப்போது நிலைதடுமாறிய செந்தில்முருகன், டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த இரண்டாவது டிரெய்லரில் மோதி கீழே விழுந்தாா். இதில், டிரெய்லா் அவா் மீது ஏறியதில் டயருக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வழியிலேயே செந்தில்முருகன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிராக்டரைப் பறிமுதல் செய்தனா். மேலும், இரண்டு டிரெய்லா்களை இணைத்து டிராக்டரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் ஆனந்திடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.