கரூர் பலி நிகழ்ந்து ஓராண்டு நினைவு நாளில், “தமிழ்நாட்டு உறவுகளின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்” என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் பதிவிட்டுள்ளார்.கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள். சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.On the first anniversary of the Karur tragedy, Chief Minister C. Joseph Vijay posted, "It was the day a painful incident occurred—leaving an unhealed wound and unending agony in the hearts of the people of Tamil Nadu."கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!