ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான 400 மீ. தடகளத்தில் இந்திய வீராங்கனை பிராச்சி சௌத்ரி வெண்கலம் வென்று அசத்தினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.இதில் மகளிருக்கான 400 மீ. தடகளத்தில் இந்திய வீராங்கனை பிராச்சி சௌத்ரி நேற்றிரவு நடந்த இறுதிப் போட்டியில் பங்கேற்றார். அதில் 53.21 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து அசத்தினார். இந்தப் பிரிவில் பஹ்ரைனின் வீராங்கனை சல்வா ஈத் நாஸர் 49.20 நொடிகளில் சாதனையுடன் கடந்து தங்கம் வென்றார். ஈரானைச் சேர்ந்த வீராங்கனை ஜஹ்ரா ஜெராய் மனோஜன் 52.38 நொடிகளில் வெள்ளி வென்றார். இந்தப் பிரிவில் இறுதிப் போட்டியில் பங்கேற்ற மற்றுமொரு இந்திய வீராங்கனை கிரண் பஹால் 53.41 நொடிகளில் கடந்து ஐந்தாம் இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். பிராச்சி சௌத்ரியின் இந்த வெற்றியுடன் இந்தியாவுக்கு 30 பதக்கங்கள் கிடைத்துள்ளன. அதில் 4 தங்கம், 12 வெள்ளி, 14 வெண்கலம் கிடைத்துள்ளன. BRONZE FOR PRACHI! ⚡Prachi Choudhary (TOPS Development Athlete) clocks 53.21s to secure the Bronze Medal in the Women’s 400m Final at #AsianGames2026! ♀️A podium finish for India as Prachi turns the track into a stage for a statement performance! #Cheer4Bharat… pic.twitter.com/ScL7y3JC7r— SAI Media (@Media_SAI) September 26, 2026வெள்ளி வென்ற இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங்..! ஆசிய விளையாட்டில் ஹாட்ரிக் பதக்கம்! Prachi Choudhary Win Bronze In Women's 400m For India At Asian Games 2026