கரூர் பலி: நெஞ்சில் என்றும் நீங்காத வலி- அமைச்சர் நிர்மல் குமார்

Wait 5 sec.

கரூர் பலி நிகழ்ந்து முதலாமாண்டு நினைவு நாளையொட்டி அமைச்சர் நிர்மல் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கரூர் துயரச் சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று…கரூர் துயரச் சம்பவத்தில் நம்மை விட்டு பிரிந்த 41 உயிர்களின் இழப்பு என்றும் ஆறாத எங்களின் வாழ்நாள் துயரம்…அவர்களோடு பல கனவுகளும், எதிர்பார்ப்புகளும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களின் உலகமும் போய்விட்டது.அன்று ஏற்பட்ட அந்த துயரம், எங்கள் நெஞ்சில் என்றும் நீங்காத வலி.நம்மை விட்டு பிரிந்த அந்த 41 உயிர்களின் நினைவுகள் என்றும் எங்களுடன் வாழும்.அவர்களை என்றும் மறக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி முதல்வரும், தவெக தலைவருமான விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. On the occasion of the first-year remembrance day of the Karur tragedy, Minister Nirmal Kumar has expressed his condolences.கரூர் பலி: ஆறாத ரணம், தீராத வலி, வேதனையான நிகழ்வு நடந்த நாள்... முதல்வர் விஜய் அஞ்சலி!