ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப் 28 ஆம் தேதி தொடங்கிய போர் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களின் விளைவாக உலகளவில் முக்கிய எண்ணெய் வழிப் போக்குவரத்தான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது. இதனால், உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவி வருகின்றன.இரு நாடுகளும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரானின் துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்குதல், 12 பில்லியன் டாலர் மதிப்புடைய ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல், ஈரான் மீதான எரிப்பொருள் சார்ந்த தடைகளை நீக்குதல், லெபனானை உள்ளடக்கிய போர்நிறுத்தம் போன்ற நிபந்தனைகளை ஈரான் முன்வைத்தது.இந்த நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் 7 நாள்களில் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாம் என்றும் ஈரான் முன்மொழிந்திருந்தது. இதையடுத்து, இந்த நிபந்தனைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்தார். இதுகுறித்து டிரம்ப் பேசுகையில், “ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் விரும்புகிறது. நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால், அவர்களுடைய நிபந்தனைகளை ஏற்க முடியாது.ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரானியர்கள் பலியாகிக் கொண்டிருப்பதால் ஹோர்முஸ் நீரிணையை திறக்க அவர்களும் விரும்புகின்றனர்” என்று தெரிவித்தார்.VIDEO | Washington DC, USA: President Donald Trump says, "We have total control over Strait of Hormuz; Iran wants to immediately open it because they are dying."(Full video available on PTI Videos - https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/czrOY4YPyY— Press Trust of India (@PTI_News) September 27, 2026ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு!US President Donald Trump stated that the Strait of Hormuz is entirely under US control.