மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் நாளை தரிசனம்!

Wait 5 sec.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப். 17-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், முதல்வர் விஜய் நாளை(செப். 28) மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் திங்கள்கிழமை (செப். 28) தொடங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. 2026-ஆம் ஆண்டு, ஜூன் 22-ஆம் தேதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.இதற்கான தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்று, முதல் கட்டமாக 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்து, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார்.இத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு மோதிரமும் 22 கேரட் தூய்மையுடன், 1 கிராம் எடையைக் கொண்டுள்ளது.இதையடுத்து, ரூ. 10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்துவைக்கிறார். பின்னர், இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் ரத்தம் தோய்ந்த ஆடைகள், அவர் பயன்படுத்திய பொருள்களை பாா்வையிடுகிறார்.இதைத் தொடர்ந்து, மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் முதல்வர், மாலை 4.30 மணிக்கு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு செல்வார் எனக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலின் குடமுழுக்கு கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போது மண்டல பூஜைகள் நடைபெற்று வருவதால், முதல்வர் கோயிலுக்குச் செல்வது உறுதி என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், முதல்வர் கோயிலுக்கு செல்வது தொடர்பாக உறுதி செய்யவில்லை.Following the consecration ceremony of the Madurai Meenakshi Sundareswarar Temple held on September 17 after a gap of 17 years reports indicate that Chief Minister Vijay is scheduled to offer prayers at the Meenakshi Amman Temple tomorrow (September 28).மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கட்டணமில்லா தரிசனம் நீட்டிப்பு!