கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு அஞ்சலி தெரிவித்து திமுக எம்.பி. கனிமொழி ஞாயிற்றுக்கிழமை (செப். 27) பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 41 போ் பலியாகினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஆன நிலையில், இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது.இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில், அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக, இந்த சம்பவம் ”தமிழ்நாட்டு உறவுகளின் மனதில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்” என்று முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு கடந்துவிட்டது.இத்துயரச் சம்பவம் ஏற்படுத்திய ரணம், தமிழ் மக்களின் மனங்களில் ஆறாவடுவாக இருக்கிறது. இனி இதுபோன்ற ஒரு துயர நிகழ்வு எங்கும் நடைபெறாத வகையில்,…— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 27, 2026கரூர் பலி: ஆறாத ரணம், தீராத வலி, வேதனையான நிகழ்வு நடந்த நாள்... முதல்வர் விஜய் அஞ்சலி!DMK MP Kanimozhi issued a statement on Sunday (Sept. 27) paying tribute to those who lost their lives in the stampede in Karur.