போக்சோ வீரமணியால் பள்ளி மாணவி தற்கொலை? 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Wait 5 sec.

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வீரமணியால் 2014-ல் பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக பலியான மாணவியின் தாயார் புகார் அளித்துள்ளார்.சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் அவரது உதவியாளரான சாந்தியும் அவரது கணவரும், மற்றொரு (முன்னாள்) உதவியாளரான கணேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் வீரமணியால் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வீரமணி மீது மேலும் சில சிறுமிகள் புகார் அளித்துள்ளனர்.இந்த நிலையில், 2014-ல் வீரமணியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் தாயார் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் மாணவியின் தாயார் தெரிவித்திருப்பதாவது, "வீரமணி, ஏழை - எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் அவரைச் சந்தித்தோம். எங்கள் மகளின் படிப்புச் செலவை அவர் ஏற்றுக்கொள்வதாகக் கூறி, ஒரு தனியார் பள்ளியில் சேர்த்து விட்டார்.இந்த நிலையில்தான், எங்கள் மகள் பிளஸ் 2 படித்தபோது, எங்கள் மகளை வீரமணி பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான எங்களின் மகள் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அப்போதே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். இருப்பினும், வீரமணி செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கிலிருந்து தப்பி விட்டார். ஆனால், தற்போது வீரமணி கைது செய்யப்பட்டிருப்பதால், எங்கள் மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கும் நீதி கிடைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.12 ஆண்டுகளுக்கு முன்பே (2014) வீரமணி மீது ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக மாணவியின் தாயார் கூறுகிறார். ஆனால், 2017-ல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. காவல் நிலையம் எரிக்கப்பட்டதில் அங்கிருந்த ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகின. இதனால், மாணவியின் தாயார் அளித்ததாய்க் கூறும் புகார் ஆவணமும் எரிந்திருக்கலாம்.இருப்பினும், வழக்கு விவரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் என்பதால், மாணவியின் தாயார் அளித்த புகாரின் ஆவணங்களை இணையதளத்தில் இருந்து கைப்பற்ற காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.கரூர் பலி: ஆறாத ரணம், தீராத வலி, வேதனையான நிகழ்வு நடந்த நாள்... முதல்வர் விஜய் அஞ்சலி!Plus-2 student commits suicide due to Veeramani, who has been arrested in a POCSO case