கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் படங்களுக்கு அவர்களுடைய உறவினர்கள் மற்றும் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி ஞாயிற்றுக்கிழமை (செப். 27) அஞ்சலி செலுத்தினர்.கடந்த ஆண்டு செப். 27ஆம் தேதி தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் படுகாயம் அடைந்தனர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் தவெக சார்பில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களின் படங்கள் பொறிக்கப்படாமல் அவர்களின் பெயர்கள் மட்டும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி மேடையில் பொறிக்கப்பட்டிருந்தன. மேலும் படத்தின் கீழே வேலுச்சாமிபுரத்தில் இருந்து உயிரிழந்தவர்களின் இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண் ஆறு தட்டுகளில் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் காலை 9:30 மணிக்கு தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கட்சியின் மாநில துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மேடைக்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து மேடையில் ஏறிய உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மேடையில் உயிர் நீத்த தங்களது உறவினர்களின் பெயர்களை பார்த்து கதறி அழுதனர். கரூர் பலி: ஆறாத ரணம், தீராத வலி, வேதனையான நிகழ்வு நடந்த நாள்... முதல்வர் விஜய் அஞ்சலி!Relatives of the victims of the Karur stampede paid tribute by lighting candles before their photographs on Sunday (Sept. 27).