சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராக உள்ள அருண் ஐபிஎஸ், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று கோவை மாநகர ஆணையர் கண்ணனையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.ஊழல் கண்காணிப்பு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த அருண் ஐபிஎஸ், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக அருண் நியமிக்கப்பட்டு இரு மாதங்கள் கூட ஆகாத நிலையில் காவலர் பயிற்சி மைய இயக்குநராக மாற்றப்பட்டார். தற்போது இரு மாதங்களில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!Arun IPS transferred to the waiting list