தண்ணீர் இருந்தால்தானே தமிழகத்துக்கு கொடுக்க முடியும்: கர்நாடக முதல்வர்

Wait 5 sec.

தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடுவது குறித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் செய்தியாளர்களுடன் டி.கே.சிவகுமார் பேசியதாவது, "எங்களுக்குத் தண்ணீர் கிடைத்தால் நாங்களே வெளியேற்றி விடுவோம். ஆனால், எங்களுக்கே நீர்வரத்து நின்றுவிட்டது. மழை இல்லாமல், நீர்வரத்து நின்றதால் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால், அணைகளில் நீர்வரத்து இல்லை.தண்ணீர் நிலவரம் குறித்து நடைபெறும் சிறப்பு அமர்வு கூட்டத்தில் நீர்ப்பாசன அமைச்சருடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.மாநிலத்தில் நிலவும் வறட்சியையடுத்து, விவசாயிகளுக்கு உதவிகள் வழங்குவது மற்றும் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு ஒத்துழைப்பு குறித்தும் திட்டம் வகுக்கப்பட வேண்டும். இவை குறித்து சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது.விவசாயிகளின் நலனுக்காகவே அரசு செயல்பட்டு வருகிறது. மாநில மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளவும், பொது நலன்களைப் பாதுகாக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று தெரிவித்தார்.மேலும், காவிரி நீர்த் திறப்பு விவகாரத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.ஜெம் வீரமணி வழக்கு! ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்: இபிஎஸ்Karnataka in crisis, difficult to release Cauvery water to Tamilnadu, says CM Shivakumar