தற்கொலைக் கடிதம், விஷ பாட்டில்! மாணவி கொலையை தற்கொலையாக மாற்றிய பேராசிரியர்

Wait 5 sec.

தற்கொலைக் கடிதம், விஷ பாட்டில், சிம் கார்டுகள்! மாணவி கொலையை தற்கொலையாக மாற்றிய பேராசிரியர்தெலங்கானாவில், பொறியியல் மாணவி மரணமடைந்த சம்பவத்தில் அது முதலில் தற்கொலை போல இருந்துள்ளது. காவல்துறை விசாரணையில்தான் அது கொலை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் ஒப்பந்த பேராசிரியர் நவீன் குமாரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில், பொறியியல் மாணவியை விஷம் குடிக்க வைத்துக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இருவரும் உறவில் இருந்த நிலையில், ஏதோ ஒரு கருத்து வேறுபாடு காரணமாக, நவீன், மாணவியை கொலை செய்துவிட்டு தற்கொலை போல நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.செப். 12ஆம் தேதி அப்பெண்ணை கூட்டிச் சென்ற நவீன், அவரை ஏதோ நாடகமாடி கைப்பட தற்கொலைக் கடிதம் எழுத வைத்துள்ளார். பிறகு, விஷம் கொடுத்து குடிக்க வற்புறுத்தி, உடனடியாக மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லவில்லை.வெகுநேரம் கழித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.பிறகு, தன்னுடைய காரில் தடயங்களை அழிதுதவிட்டு, தற்கொலைக் கடிதம், விஷ பாட்டில், சிம் கார்டுகளை வைத்து தற்கொலை போல நாடகமாடியிருக்கிறார்.ஆனால், விசாரணையில், சிசிடிவி காட்சிப் பதிவுகள், செல்போன் அழைப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த காவல்துறை, நவீனை கைது செய்திருக்கிறார்கள்.மேலும் இந்த வழக்கில், மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலையான பெண் ஏற்கனவே புகார் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.