ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றம்சாட்டப்படும் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.இந்த வழக்கில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் இருவருரையும் மூன்று நாள்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.அந்த மனுவில் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் எடுத்து விசாரித்த ஜெம் வீரமணி அளித்த தகவலின் பெயரில் இவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இன்னும் எத்தனை சிறுமிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு நாள்களாக குற்றம் நடந்தது. வேறு யார் யாருக்கு எல்லாம் தொடர்பு என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும்.எனவே இருவரையும் மூன்று நாள்கள் தங்களின் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கபட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி பத்மா, காவல்துறையின் கோரிக்கையை ஏற்று சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோருக்கு 3 நாள்கள் போலீஸ் காவல் விதித்து உத்தரவிட்டார்.Gem Veeramani Case: 3-Day Police Custody for Shanthi and Mahendra Simhan!ஜெம் வீரமணி வழக்கு! ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்: இபிஎஸ்