அக். 10ல் சென்னை வருகிறார் ராகுல் காந்தி! மாணவர்களுடன் சந்திப்பு!

Wait 5 sec.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வருகிற அக். 10 ஆம் தேதி சென்னை வரவுள்ளவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, 'மாணவர்கள் குரல்' என்ற தலைப்பில் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இந்திய கல்வி அமைப்பில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் வகையில் ராகுல் இந்த சந்திப்பை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னையிலும் ஒரு மாணவர்கள் சந்திப்பை மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி வருகிற அக். 10 ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் நடைபெறும் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். ராகுல் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொள்ளும் வகையில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. Rahul Gandhi visits chennai on oct 10 to meet studentsதொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!