இவரைத் தெரியுமா? என வாட்ஸ்ஆப்பில் வந்தால்! ஒரு கிளிக்.. வங்கிக் கணக்கு காலி!

Wait 5 sec.

இவரைத் தெரியுமா என ஒரு மங்கலான புகைப்படம் உங்கள் வாட்ஸ்ஆப்பில் வந்து, அதற்கு முன்பு, எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என்று தகவலும் வந்தால், நிச்சயம் யார் ஒருவரும் அந்த இமேஜை திறக்கத்தான் நினைப்பார்கள்.ஆனால், அப்படி நினைத்து அந்த புகைப்படத்தை கிளிக் செய்தால் போதும், வங்கிக் கணக்கில் ஒற்றை ரூபாய்கூட மிச்சம் இல்லாமல் காலி செய்யப்படும் என சைபர் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுக்கிறது.கடந்த ஒரு சில மாதங்களாக, இணையக் குற்றவாளிகள் அப்பாவி மக்களையும் அவர்களது வங்கிக் கணக்கையும் குறிவைத்து சில நுணுக்கமான மோசடிகளை நடத்தி வருகிறார்கள்.அதில் ஒரு புதிய மோசடியானது, இந்தியாவிலும் உலக அளவிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்களை குறி வைக்கிறது. அதில் பெரிதாக எதுவும் இருக்காது. ஒரு புகைப்படம் மட்டும்தான் இருக்கும். சைபர் பாதுகாப்பு குறித்து இவரை வந்த எச்சரிக்கை எல்லாம் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றுதானே? புகைப்படம்தானே வந்திருக்கிறது என்று மக்கள் ஏமாற வேண்டாம்.காரணம், இதுபோன்ற தெரியாத நபர்களிடமிருந்து வரும் படங்களைப் பதிவிறக்கம் செய்வது, உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களுக்குத் தெரியாமலேயே தீம்பொருளை (malware) நிறுவக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.அவ்வாறு செல்போனில் தீங்கிழைக்கும் மென்பொருள், வங்கிச் செயலிகளுக்குள் ஊடுருவி, கடவுச்சொற்களைத் திருடி, அதில் உள்ள பணத்தை பரிமாற்றம் செய்ய மோசடியாளர்களுக்கு துணைபுரியலாம் எனவும், இணையப் பயனர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து எந்த தகவல் வந்தாலும் உடனடியாக அந்த லிங்குகள், புகைப்படங்களை திறக்க வேண்டாம். கிளிக் செய்யும் வடிவில் என்ன வந்தாலும் அதனை தயவுகூர்ந்து கிளிக் செய்யவே வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.எப்படி நடக்கும்?முன்பின் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப்புக்கு தகவல் வரும். வாழ்த்துவது போல, மீம், விடுமுறைக் கொண்டாட்டம், விளம்பரச் செய்தி என எப்படி வேண்டுமானாலும் ஒரு மங்கலான புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். அந்த புகைப்படத்தை கிளிக் செய்துவிட்டால் ஒரு சைபர் மோசடி செயலியும் செல்போனில் பதிவிறக்கம் ஆகிவிடலாம். பிறகு அது செல்போனில் உள்ள தகவல்களை மோசடியாளர்களுக்கு அனுப்பலாம்.தவிர்க்க செய்ய வேண்டியது என்ன?வாட்ஸ்ஆப் செட்டிங்கில் சென்று ஸ்டோரேஜ் மற்றும் டேட்டா என்பதை கிளிக் செய்து, மீடியா ஆட்டோ டவுன்லோடு என்ற வாய்ப்பை ஆப் செய்து விடுங்கள். மொபைல் டேட்டா, வை-ஃபை, ரோமிங் என எதிலும் ஆட்டோ டவுன்லோடு ஆப்ஷனை அணைத்து விடவும். இது பற்றி பெரியவர்கள், எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கும், தெரிவிக்கவும். If you receive a WhatsApp message asking, "Do you know this person?"—just one click could wipe out your bank account!