வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்: நடிகர் சூரி

Wait 5 sec.

நடிகர் கமல் ஹாசன் மண்டாடி திரைப்படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ராமநாதபுர மீனவர்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவான மண்டாடி திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது. நடிகர் சூரிக்கும் தொடர் வெற்றியாக அமைந்துள்ளதால் அடுத்தடுத்து சூரி நடிக்கும் படங்களின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. One of the most unforgettable moments of my life! ❤️Dr. Kamal Haasan sir, your unconditional love, powerful words and blessings made our #Mandaadi journey even more special. Heartfelt thanks to Mahendran annae and Disney brother for making this beautiful moment possible. … pic.twitter.com/paG4ypz3wX— Actor Soori (@sooriofficial) September 23, 2026 இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் மண்டாடி திரைப்படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வை மகிழ்வுடன் பகிர்ந்த நடிகர் சூரி, “வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணங்களில் ஒன்று. கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கை, புதிய வெளிச்சம். மண்டாடி குறித்து அவர் பகிர்ந்த பார்வை வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்!” எனக் கூறியுள்ளார். எப்படி கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்? நடிகர் சூரி விளக்கம்! Actor Kamal Haasan personally invited the soori film crew and commended them.