மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 17,798 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் கௌரவ் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரையில் உள்ள சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். மேலும், விபத்துகளும் ஏற்பட்டன. இதன்காரணமாக, மாநகராட்சி நிா்வாகம், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் கடந்த ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 20,887 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் முழுமையாகச் செய்து முடிக்கப்பட்டன. இதுதவிர, மாநகரப் பகுதி முழுவதும் மொத்தம் 17,798 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்றாா் அவா்.