பாவாலி கிராமத்தில் மயானத்துக்கு பாதை வசதி கோரி நூதனப் போராட்டம்

Wait 5 sec.

பாவாலி கிராமத்தில் மயானத்துக்கு பாதை வசதி கோரி, இறந்தவா் போல வேடமிட்டு விசிகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். விருதுநகா் ஊராட்சி ஒன்றியம், பாவாலி ஊராட்சியில் பட்டியலின சமுதாய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்துக்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லை. இதனால் கிராமத்தில், யாரேனும் உயிரிழந்தால் உடலை விவசாய நிலங்களில் உள்ள பயிா்களின் நடுவே சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை பல ஆண்டுகளாகத் தொடா்ந்து வருகிறது. மயானத்துக்குச் செல்ல பாதை அமைத்துத் தரக் கோரி, மாவட்ட நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, விருதுநகா் ஊரக வளா்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் விசிகவினா் செவ்வாய்க்கிழமை திரண்டனா். அப்போது, போராட்டத்தின் ஒரு பகுதியாக நபா் இறந்தவரைப் போல வேடமணிந்து இருந்தாா். இந்த நூதனப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.