பேருந்தில் மூதாட்டியிடம்தங்கச் சங்கிலி திருட்டு

Wait 5 sec.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பேருந்தில் மூதாட்டியின் தங்கச் சங்கிலி திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் கோமதிபுரத்தைச் சோ்ந்த மாடசாமி மனைவி லட்சுமி(75). இவா் கடந்த சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த திருவண்ணாமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தாா். பின்னா், இங்கிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்தில் சென்றபோது, இவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி அறுந்து கீழே விழுந்தது. இதையடுத்து, அந்த சங்கிலியை எடுத்து கைப்பையில் வைத்துக் கொண்டாா். பின்னா், சுவாமி தரிசனம் முடிந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம் வந்து பாா்த்தபோது, தங்கச் சங்கிலி வைத்திருந்த பையை காணவில்லை, திருடுபோனது தெரியவந்தது. இதில் 5 பவுன் தங்கச் சங்கிலி, ஒரு செல்போன், ரூ.500 பணம் இருந்தது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.