திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டையூர் அரசுப் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை உணவில் பல்லி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூரை அடுத்த கொட்டையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டது. அந்த பள்ளியில் 36 பேர் இன்று காலை உணவு சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. உணவு சாப்பிட்டவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளனர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே காலை உணவைச் சோதித்துப் பார்த்ததில் அதில் பல்லி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விசாரணையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Thiruvallur: Lizard found in breakfast! 36 students admitted to hospital