பெரம்பலூர்: ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி, 3 பேர் காயம்

Wait 5 sec.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் அருகே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து ஒன்றின் பின்புறத்தில் கார் மோதியதில், நான்கு பேர் பலியாகினர்; இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் பலத்த காயமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சகோதரரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பும் வழியில், பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்து காளீஸ்வரன், பிரபாகரன், கார்த்தி மற்றும் அவரது மனைவி சூர்யா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பெண்கள் உள்பட மூன்று பேர் படுகாயங்கம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காருக்குள் சிக்கி பலியான உடல்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர். யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து ஆம்னி பேருந்து ஓட்டுநரான தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜசீலனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Perambalur: Four killed, 3 injured after car collides with private omni busஉ.பி.யில் கோர விபத்து: யமுனா விரைவுச் சாலையில் சொகுசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பலி