நடிகர் நானியின் பாரடைஸ் திரைப்படத்தில் கயாடு லோஹர் கவர்ச்சியாக நடிக்க வைக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவான தி பாரடைஸ் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த படம் என்பதாலும் இசையமைப்பாளர் அனிருத்தி ஆயா ஷெர் பாடலும் படத்திற்கு எதிர்பார்ப்புகளைக் கூட்ட, நானி ரசிகர்கள் ஆவலாக முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், இப்படத்தின் சிறப்பு கட்டணக் காட்சி நேற்று (செப். 23) மாலை இந்தியாவின் பல பகுதிகளிலும் திரையிடப்பட்டது. அதில் காட்சியைக் கண்ட ரசிகர்கள் படம் சுமாரா இருப்பதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை கயாடு லோஹரை மிகக் கவர்ச்சியாக காட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தெலுங்கு கமர்சியல் திரைப்படங்களில் ஏன் இன்னமும் நாயகிகளை வேண்டுமென்றே கவர்ச்சியாகக் காட்டி வருகின்றனர் என்கிற பார்வையும் விவாதிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான பெத்தி படத்திலும் நடிகை ஜான்வி கபூரை அரைகுறை ஆடையுடன் வரும் நாயகியாக நடிக்க வைத்திருந்தனர். தற்போது, நடிகர் நானி திரைப்படத்தில் கயாடு லோஹரும் அந்த மாதிரிதான் பயன்படுத்தப்பட்டுள்ளார் எனக் கண்டனங்கள் எழுந்துள்ளன. ரஜினி, சூர்யாவுக்காக... ஓம் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த தனுஷ்! Criticism has arisen regarding Gayadu Lohar's glamorous portrayal in actor Nani's film Paradise.