ஆசிய விளையாட்டில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி (33 வயது) தோல்வியுற்றது ஏமாற்றம் அளித்தார். ஜப்பானின் அய்ச்சி - நகோயாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா 1 தங்கம் உள்பட மொத்தமாக 14 பதக்கங்களை வென்றுள்ளது.ஆசிய விளையாட்டின் ஐந்தாவது நாளான இன்று இந்தியாவுக்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. தமிழக வாள்வீச்சு வீராங்கனை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சீன வீராங்கனை ராவ் சூயி உடன் மோதினார். இந்தப் போட்டியில் 5-15 என சீன வீராங்கனையிடம் தோல்வியுற்று பவானிதேவி வெளியேறினார். வாள்வீச்சு உலக சாம்பியன்ஷிப் 2026ல் ராவ் சூயி வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மங்கோலிய வீராங்கனையை 15–8 என்ற புள்ளிக் கணக்கில் பவானி தேவி வீழ்த்தியிருந்தார்.தமிழக முதல்வர் விஜய்யுடன் சேர்ந்து பவானி தேவி போதைப்பொருள் ஒழிப்பிற்கான மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Into the Table of 16! Asian Games 2026 | Fencing Women’s Sabre Individual – Table of 32Bhavani Devi C.A. (TAGG Athlete | WR 72) secured a convincing 15–8 victory over Oulen Tugsjargal of Mongolia to advance to the Table of 16.Next Match: Today | 10:45 AM IST onwards… pic.twitter.com/hhL0E5DA25— SAI Media (@Media_SAI) September 24, 2026ஆசிய விளையாட்டு: வூஷூ போட்டியில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரோஷிபினா!Fencing: Bhavani Devi lost to 2026 Worlds silver medallist Rao Xueyi